2012 End of the world படத்தினை 2013 ல நம்ம ஊருகாரங்களை வைச்சு சும்மா ஒரு கப்சா
அழிந்து போன உலகில் மனித இனத்தின் மிகப்பெரிய பின்னைடவு,
பல ஆயிரம் ஆண்டுகளாக காடுகளில் திரிந்து படிப் படியாக தன் சக ஜீவராசிகளை அடக்கி உலகின் சூப்பர் பவர் இனமாக பரிணாம வளர்ச்சி அடைந்த மனித இனம் இன்று காங்கிரிட் குப்பைக்குள் உணவுக்காக அழுகி போன சக மனித சவத்தை திண்ணும் நிலைக்கு ஆளாகிவிட்டான்... விவசாயம் செய்ய வயல்வெளி இருக்கிறது...ஆனால் விவசாயம் செய்ய ஆள் இல்லை...விதை இல்லை நீர்பாய்ச்ச மோட்டார் இருகிறது ஆனால் மின்சாரம் இல்லை மின்சாரம் இல்லாத உலகில் இப்போது மனிதன் எதையும் செய்ய இயலாதவன்..அப்படி பழகிப்போய்விட்டான்...இப்போதும் தானாக தன் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய முடியாதவனாக மின்சாரத்தின் உதவியில் 2 நூற்றாண்டுகளாக பழகி போய்விட்டான்....
இப்போது அழுகிப்போன சகமனிதனாக இருந்தாலும் சாப்பிடத் துவங்கி விட்டான். ...இதே சமயம் .... தென்இந்திய காடுகளில் குரங்கினங்களின் அவசர கூட்டம் நடந்து கொண்டிருந்தது...அங்கே
ஒரு வாட்டசாட்டமான இராஜா கொரில்லா "
இது தான் சரியான சமயம் காலம் காலமா நம்மை அடக்கி வைச்சிருந்த மனுசனுங்க இப்ப பலமிழந்து இருக்காங்க நம் அதிர்ஷ்டம் அவர்கள் அடுத்தவரின் உதவி இல்லாம் உயிர் வாழ்வே முடியாத சூழ்நிலைக்கு தள்ள பட்டுடாங்க.. கிடைச்சத சாப்பிட்டுகிட்டு கிட்டதட்ட பல ஆயிரம் வருசங்களுக்கு முன்ன காட்டுல திரிஞ்ச மாதிரி இப்ப அவங்க அந்த காண்க்ரீட் குப்பைல திரியறாங்க... இப்ப நாம் சரியா திட்டம் போட்டு, நம்மை பயமுறுத்த அவங்க பயன்படுத்தின ஆயுதங்களை நாம் கைப்பற்றினா போதும் மனுச பசங்க எல்லாம் இனி நம் அடிமைகள்...எப்பவோ இழந்த நம் வன உலகத்தை, வன சாம்ராஜியத்தை திரும்பவும் கட்டி எழுப்பும் நாள் வந்துடுச்சி...நம்மை வாணரப்படைனு இராமாயணத்துல நம்ம அனுமதி இல்லாம நம்மை பயன்படுத்தி நம்மை கேவலப்படுத்தின அத்தனை மனுசப்பசங்களும் இனி நம் கட்டளை படி நடக்க போற நாள் வந்துடுச்சி...எல்லாரும் ஒண்ணு கூடி வாங்க...ஒரு நிஜமான கொரில்லா தாக்குதல மனுச பயலுங்களுக்கு நாம் கட்டுவோம்...புறப்படுங்கள்....வெற்றி நமதே..............."...காடு முழுவதும் ஒரே குரங்குகளின் உற்சாக குரல்....
அவை மனித இனத்தை அடிமைபடுத்த ஒரு நிஜமான கொரில்லா யுத்தத்திற்க்கு தாயாராகி வருகின்றன....கூட்டம் கலைந்து செல்லும் வேலையில் நம் தமிழ்க்குரங்கு இரண்டு"
மச்சான் சணடைல நாம் ஜெயிச்சா நீ முதல்ல என்னாடா பண்ணுவ" ..என எதிர்காலத்திட்டம் பற்றி பேசத்துவங்கின.. "
சண்டைல நாம் ஜெயிச்சா மனுசங்கள அரசியல்வாதி'ன்னு ஒரு ஜாதி இருக்காம் அவனுங்கள பிடிச்சி மனிதக்காட்சி சாலை ஒண்ணு திறந்து அங்க கூண்டுல அடைச்சி வைக்கனும் இல்லைன்னா நம்மள அவனுங்க குழப்பிடுவாங்க"
(((தொடரும்)))